திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மெய்யம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான புளியந்தோப்பில் 100 ஆண்டுகள் பழமையான புளியமரத்தில் மையப் பகுதியில் இருந்து இன்று காலை முதலே புகை வெளியாகி அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது.

சிறிது நேரத்தில் புளிய மரத்தின் மையப்பகுதியில் தீ மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதுகுறித்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின், மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)