• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தாலி உட்பட 5,சவரன் தங்க நகை கொள்ளை..,

ByR.Arunprasanth

May 30, 2025

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பாரதிபுரம் பகுதியில் வசித்து வருபவர், சுந்தரமூர்த்தி (வயது-48) இவர் மனைவி சுமதி (வயது-47) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சுந்தரமூர்த்தி அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகின்றார், இவர் அதிகாலை 2 மணி அளவில் பழம் வாங்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட் செல்வது வழக்கம் அதேபோன்று இன்று அதிகாலை சுந்தரமூர்த்தி மற்றும் அவரது மகனுடன் பழம்வாங்க சென்றுள்ளார்.

பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து வந்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் கலைக்கப்பட்டு மனைவி சுமதி மயக்க நிலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே மனைவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரித்த போது மர்ம நபர் ஒருவர் அதிகாலையில் வீட்டுக்கு வந்து கத்தியை காட்டி கழுத்தில் அணிந்த தாலி மற்றும் தங்க நகைகளை அறுத்துக் கொண்டு சென்றதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் உள்ள குற்றப் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் சுமதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

ஐந்து வருடங்களாக சிறுக சிறுக பணம் சேர்த்து வாங்கிய நகையை பத்து நிமிடத்தில் மர்ம நபரால் பறித்துக் கொண்டு சென்றதால் குடும்பமே மன வேதனையில் உள்ளார்கள். உடனே குற்றவாளியை கைது செய்து நகையை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் .