• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

27 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்..,

ByE.Sathyamurthy

May 28, 2025

தாம்பரம் காவல் ஆணையரகத்தில், 27 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், 5 பேர், உதவி ஆய்வாளராக இருந்து, ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர்.

தாம்பரம் காவல் ஆணையரகத்தில், 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் தொடர் புகார் வரும் காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், 27 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், 5 பேர், உதவி ஆய்வாளராக இருந்து, ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் ஆவர்.

குரோம்பேட்டை சட்டம்– ஒழுங்கு ஆய்வாளராக இருந்த ராஜேசேகரன்–செம்மஞ்சேரி சட்டம்– ஒழுங்கு; கண்ணகி நகர் ஆய்வாளராக இருந்த தயாள்– குரோம்பேட்டை; பல்லாவரம் ஆய்வாளராக இருந்த தினேஷ்– பள்ளிக்கரணை மதுவிலக்கு; பள்ளிக்கரணை ஆய்வாளராக இருந்த நெடுமாறன்– கூடுவாஞ்சேரி; மணிமங்கலம் ஆய்வாளராக இருந்த அசோகன்– மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற, செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த டில்லிபாபு– மணிமங்கலம் சட்டம்–ஒழுங்கு; ஆண்டனி சகாய பரத் சோமங்கலம் சட்டம் ஒழுங்கு; முத்துகுமார்–சோமங்கலம் குற்றப்பிரிவு; திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகரன்–உளவுப்பிரிவு; சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம்–மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.