புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம் சிறப்பு திட்ட செயலாக்க அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஆய்வு கூட்டத்தை நடத்தினோம்.
முதலமைச்சரின் உத்தரவின் படி இந்த ஆய்வு கூட்டத்தை தற்போது நடந்து முடித்துள்ளோம். சில அரசு பணிகளில் சுனக்கம் இருப்பதை சுட்டிக்காட்டி அப்பணியில் விரைவாக நடக்க ஆலோசனை வழங்கினோம்.

தற்பொழுது 2015 ஆம் ஆண்டு கடந்த ஆட்சியில் உள்விளையாட்டு அரங்கம் கட்ட ஆரம்பித்தனர் பின்னர் அப்பணியை நிறுத்திவிட்டனர். பண ஒதுக்கீடு இப்பணிக்கு இல்லாததால் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.. தொடர்ந்து இதை யாரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பணி தொடர வேண்டுமென்றால் மேலும் 4:30 கோடி ரூபாய் தேவை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து முதலமைச்சர் இதனை உடனடியாக ஆய்வு செய்து இப்ப பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டதால் தற்பொழுது ஆய்வு செய்து தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக மூன்றரை கோடி ரூபாயை ஒதுக்கி தந்துள்ளார்.
மீதமுள்ள ஒரு கோடி ரூபாய்க்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி நிதியிலிருந்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். விரைவில் மீதமுள்ள பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு நமது மாவட்ட விளையாட்டு வீரர்கள் இதனை பயன்படுத்தி பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உள் விளையாட்டு அரங்கம் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் செட்டில் கோர்ட் மற்றும் கபடி ஹாக்கி பாக்ஸிங் ஹால்.உள்ளிட்ட நவீன விளையாட்டு அரங்கங்கள் வர இருக்கிறது. வருகின்ற டிசம்பர் மாதத்துக்குள் இப்பணிகள் அனைத்தும் முடிவடையும். தமிழக முதல்வர் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றது பற்றி விமர்சனங்கள் இருந்தது பற்றி கேட்டபொழுது,
தமிழக முதல்வர் மாநில நலனுக்காக நிதி பெறுவதற்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் செய்வதற்காக பேசுவார்கள்.. மேலும் செய்தியாளர்கள் வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்து தான் நிதியாய் கூட்டத்திற்கு முதல்வர் சென்றுள்ளார் என்று எதிர்க்கட்சிப்பை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர் என்று பற்றி கேட்ட பொழுது நான் பலமுறை கூறியுள்ளேன். இ டி ரைடல்ல மோடி ரைடுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்போம் என்ன பண்ணுனாங்க. மிரட்ட பார்த்தாங்க மிரட்டி அடிபணிய வைப்பதற்கு அடிமை கட்சி திமுக கிடையாது.
இது கலைஞர் உருவாக்கிய கட்சி சுயமரியாதை கட்சி. தவறு செய்வதர்தான் பயப்பட வேண்டும் நாங்கள் பயன்படுத்த தேவையில்லை பயப்பட அவசியமும் இல்லை. எதுவாக இருந்தாலும் சட்ட பூர்வமாக நாங்கள் சந்திப்போம். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளரிடம் தெரிவித்தார்.