• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும்..,

ByS. SRIDHAR

May 21, 2025

அறந்தாங்கி தொகுதியில் இந்த முறை திமுக போட்டி போட வேண்டும் என்று அனைவரும் கூறியுள்ளனர் நான் முடிவெடுக்க முடியாது தலைவர் ஸ்டாலின் தான் முடிவு எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டையில் கே என் நேரு பேட்டி,

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு.

திமுகவினர் உற்சாகமாக தற்போதையிலிருந்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்
முதல்வர் கூறியது போல 7 வது முறையாக மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும்.

தற்போது கருத்துக்கள் கேட்டபோது அரசு சார்பாக விடுபட்டது எது எது செய்ய வேண்டும் என்று எங்களிடம் கூறியுள்ளனர்.

அனைத்தையும் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன் முதல்வரிடம் எடுத்துக் கூறி அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

அதிமுக எப்பொழுதும் திமுகவை குறை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள்
அவர்கள் குறை கூறினாலும் கடந்த 10 தேர்தல்களிலும் திமுக தான் வென்றுள்ளது.

26 திமுக ஆட்சிக்கு வராது என்று எல்லாரும் சொல்கிறார்கள் ஆனால் பொதுமக்கள் முதல்வருக்கு தான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

டெல்டா மாவட்டத்தில் 41 தொகுதிகள் கொடுத்துள்ளனர் அதில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவிற்கு சாதகமாக தான் உள்ளது.

அறந்தாங்கி தொகுதியில் இந்த முறை திமுக போட்டி போட வேண்டும் என்று அனைவரும் கூறியுள்ளனர். நான் முடிவெடுக்க முடியாது தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் இவர்களுடைய கோரிக்கையை முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன். இவ்வாறு அமைச்சர் கே என் நேரு கூறினார்.