புதுக்கோட்டை மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் ராஜசிம்மன் சிலம்ப பாசறை சார்பில் 39 ம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள்
குலபதி பாலையா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் மாமல்லன் செந்தில் வரவேற்றார் மாவட்டத் தலைவர் தங்கமூர்த்தி தலைமை தாங்கினார்.
தட்சினாஸ் கரிகாலன் சிலம்ப பாசறை நிறுவனர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
விழாவில் கவிஞர் தங்கமூர்த்தி டாக்டர் சலீம் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மாவட்ட முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்று உள்ளனர்.