• Thu. Aug 6th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கர்ப்பப்பை புற்றுநோய் விழிப்புணர்வு பயணம்..,

கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், ரோட்டரி சங்கத்தின் தலைமையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபெறும் விழிப்புணர்வு ஊர்தி பயணம் இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பயணத்தினை கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார், மற்றும் வருங்கால ரோட்டரி ஆளுநர் காந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி எடுப்பதன் அவசியத்தையும், அவற்றின் பாதுகாப்பான பயனையும் பொதுமக்களுக்கு எளிமையாக புரியவைக்கும் வகையில் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் துவங்கி, நெல்லை, மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக சென்னையை சென்றடைந்தும் வரை, வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள், மாணவிகள் மற்றும் மருத்துவப் பிரிவினர் ஆகியோருக்கு கல்வி, விளக்கங்கள், விளக்கவுரைகள் போன்றவையும் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்களாக சரவணன், ஆறுமுக பாண்டியன், கன்னியாகுமரி ரோட்டரி தலைவர் மைக்கேல் ராஜ், மற்றும் நிர்வாகிகள் எட்வர்ட், பீட்டர், ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்று செயல்பட்டனர். ரோட்டரி சங்கத்தின் இந்த முயற்சி, பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திசையில் ஒரு முக்கியமான பயணமாக கருதப்படுகிறது.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் தடை மற்றும் துணிப்பையை பயன்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.