தமிழக முழுவதும் அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி யின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்ற சூழலில்,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பெயரில் உசிலம்பட்டி நகர் கழகத்தின் சார்பில் நகரச் செயலாளர் பூமாராஜா தலைமையில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவு மான ஐ.மகேந்திரன் முன்னிலையில் அதிமுகவினர் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருமுருகன் கோவில் முன்பு புரட்சித்தமிழர் ஐயா எடப்பாடி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவில் 2026 கழக ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம் என பொறிக்கப்பட்ட 17 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
இதில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் சகுந்தலா,நகராட்சி கவுன்சிலர்கள் பிரகதீஸ்வரன், ராமகிருஷ்ணன், அலெக்ஸ்,நடுப்பாண்டி, வேல்காட், லட்சம், குணசேகரபாண்டியன்,ராமமூர்த்தி,பிரபு மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.