சிவகாசி சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28).இவர் சொந்தமாக மினி லோடு ஆட்டோ வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் ரஞ்சித்குமார் அவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தன்னுடைய அண்ணன் காரில் தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் உள்ள மாதா கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

இந்த நிலையில் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டி விளக்கில் ரஞ்சித்குமார் ஒட்டி வந்த காரில் உள்ள ஏசி சிலிண்டரில் திடீரென புகை அதிக அளவில் வெளிவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித் குமார் அவசரமாக காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரை விட்டு உடனடியாக வெளியேறி உள்ளனர்
இந்த நிலையில் சாலையில் ஓரத்தில் நின்ற கார் சிறிது நேரத்தில் மல மலவென தீப்பற்றி கொழுந்து விட்டு எறிந்தது.
கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை முற்றிலுமாக கட்டுப்படுத்தினர்.
மேலும் இந்த விபத்தில் ரஞ்சித் குமார் ஓட்டி வந்த கார் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.