கோவை, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழா : உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பின் – சிறப்பாக திருவீதி உலா நடைபெற்றது.
5 கிலோ மீட்டர் சுற்று அளவு திருவீதி உலா திருவிழா நடைபெற்று வந்தது : ஆனால் தற்பொழுது 1.2 கிலோ மீட்டர் மட்டும் காவல் துறை அனுமதி அளித்து உள்ளது – இந்து ஆலய பாதுகாப்பு குழு தகவல்.

உத்தரவுப்படி ஆண்டுதோறும் நடத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தல் – இந்து ஆலய பாதுகாப்பு குழுவில் தெரிவித்தனர் .
32 ஆண்டுகளுக்குப் பின்னர் சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வழக்கமாக 32 ஆண்டுகளுக்கு முன்னர் 5 கிலோ மீட்டர் வரை தேர்பவனி செல்லும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்று தேர் பவனி ஏற்பாடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர் .
இத்தேர் விழாவிற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பாதுகாப்பு அளித்த காவல்துறையினருக்கும் இந்து சமய ஆலய பாதுகாப்பு குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.



