• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி… ஆணையர் அலுவலகத்தி்ல் புகார் மனு..,

BySeenu

May 10, 2025

வெளிநாடு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி, சுமார் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கோவையை சேர்ந்த நபர் மீது காவல் துறை ஆணையர் அலுவலகத்தி்ல் புகார் மனு அளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் பாபு என்பவர் கோவை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழஙகியுள்ளார்.
மனுவில் தாம் சென்னையைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மூலமாக கோவையைச் சேர்ந்த சஞ்சய் குமார் ரெட்டி என்பவருது அறிமுகம் கிடைத்ததாகவும், இந்நிலையில் அவரிடம் தாம் வெளிநாடு வேலைக்கு செல்வதாக கூறிய போது, சஞ்சய் குமார் ரெட்டி தான் வெளிநாட்டு நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பதாக கூறியதாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் தாமும் தனது நண்பர்களும் வெளிநாடு சென்று வேலைக்கு செல்ல விரும்பியதை கூறிய நிலையில், நண்பர்கள் பணம் உட்பட எனது பணத்தையும் அவரிடம் வழங்கியதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மோசடி செய்ததாக அறிந்த நிலையில், அவர் மீது தற்போது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் கார்த்திகேயன் செய்தியாளிடம் கூறுகையில்..,

மோசடியில் ஈடுபட்டுள்ள சஞ்சய் குமார் ரெட்டி, இதே போல தஞ்சாவூர் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் அவர் மீது மோசடி வழக்கு இருப்பதாக கூறிய அவர், வெளிநாடு செல்வதாக சஞ்சய் குமார் ரெட்டி 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தார்.