திண்டுக்கல்லுக்கு இன்று 09.05.25 வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற மே மாதம் 20ம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க உள்ளது.
பல கட்டங்களாக போராடி பெற்ற தொழில் சங்க சட்டங்களை எல்லாம் தூள் தூளாக்கி முதலாளிகளுக்கும் கார்ப்பரேட் ட் கம்பெனிகளுக்கும் சாதகமான நான்கு சட்டங்களை மத்திய அரசு கொண்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு விரோதமான அந்த நான்கு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு தொழிலாளர் வினோத சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர திமுக அரசு தயக்கம் காட்டி வருகிறது. அதேநேரம் இருபதாம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் திமுக பங்கேற்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு மக்கள் 20 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பகல்காமில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் என்பது வன்மையாக கண்டனத்திற்குரியது. அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டது என்பது சகித்துக் கொள்ள முடியாது. தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.
இரண்டு அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளாதது சரியல்ல.
கூட்டத்தை கூட்டியது மத்திய அரசு அதனுடைய தலைவர் பிரதமர் மோடி. அவரே அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாது ஏன் என்று தெரியவில்லை. அதைவிட முக்கியமான வேறு வேலை என்னவென்று தெரியவில்லை.
நாடு முழுவதும் தீவிரவாதிகள் பகல்காம் தாக்கல் பற்றியும் தீவிரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை பற்றியும் தான் பேசப்பட்டு வருகிறது.
அதற்கான கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளாது சரியல்ல.
சம்பவம் நடைபெற்ற தினத்தில் இருந்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என கூறி வருகிறோம் ஆனால் உள்துறை அமைச்சரோ ராணுவ துறை அமைச்சரோ இது பற்றி மத்திய அரசின் கருத்து கூட தெரிவிக்கவில்லை.
இப்பவும் கூறுகிறோம் இதற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும். பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா உளவுத்துறையில் குறைபாடு உள்ளதா என விவாதிக்க வேண்டும் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும்.
போர் பதட்டத்தை உருவாக்கும் வகையில் எல்லையில் உள்ள மாநிலங்களைத் தவிர சம்பந்தமில்லாத அனைத்து மாநிலங்களிலும் போர் ஒத்திகை என்ற பெயரில் மக்களுடைய அச்சத்தை உருவாக்கி வருகின்றனர். மக்கள் மத்தியில் போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் அரசு பணி வேலைக்காக காத்திருக்க கூடிய இளைஞர்களுக்கு நிரந்தர பணியிடத்தை ஒதுக்க மாநில அரசு முன்வர வேண்டும் அதைத் தவிர்த்து ஒப்பந்தம், தொகுப்பு ஊதியம் போன்ற வகையில் பாதுகாப்பு அற்ற பணி நியமனம் செய்யக்கூடாது. அரசின் பணி நியமன முறையில் மாற்றம் வர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு எந்த இடையூறுகளும் கிடையாது ஆனால் இதுவரை ஒரு ஏக்கர் பஞ்சமி நிலம் கூட மீட்கப்படவில்லை. ஆகையால் தமிழக அரசு உடனடியாக பஞ்சமி நிலங்களை மீட்டு இடமில்லாதவர்களுக்கு இடங்களை வழங்க வேண்டும் தமிழகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல லட்சம் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நீர்நிலை புறம்போக்கில் வசித்துபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவைக் காட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
அதேநேரம் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றை மாநில அரசு கட்டி உள்ளது இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். எனவே அரசின் அணுகு முறையில் மாற்றம் வேண்டும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்புறப்படுத்த வேண்டும் என்றால் மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோது 100 நாள் வேலை திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதின் பேரில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது என கூறியது குறித்த கேள்விக்கு,
மத்திய அரசு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கான நிதிகளை குறைப்பது வேலை நாட்களை குறைப்பது போன்ற புதிய பல்வேறு இடர்பாடுகளை உருவாக்கி வருகிறது. என்னென்ன செய்து இந்த திட்டத்தை முடக்க முடியுமோ அதனை மத்திய அரசு செய்து வருகிறது. அதன் காரணமாகத்தான் தமிழகத்திற்கு தரவேண்டிய 4,000 கோடியில் தற்பொழுது 2,999 கோடி நிதியை பல கட்ட போராட்டங்கள், முதலமைச்சர் கடிதம் எழுதிய பிறக்கும், நிதி அமைச்சர் நேரில் சந்தித்த பிறகு தற்பொழுது ஒதுக்கீடு செய்துள்ளனர்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அமிர்தஷாவை நேரில் சந்தித்த பிறகு தமிழகத்திற்காக நான் இன்னென்ன கோரிக்கை வைத்துள்ளேன் என கூறவில்லை. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்த பின்பு நான் கேட்டுக் கொண்டதினால் தான் நிதி ஒதுக்கீடு செய்தனர் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.
தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசிடம், மத்திய உள்துறை அமைச்சரிடம் எடப்பாடி பழனிச்சாமி எப்பொழுதும் பேசியது கிடையாது. தமிழ்நாட்டுக்கு விரோதமான நிலைப்பாட்டை தான் அதிமுக எடுத்துள்ளது.
பிஜேபியோடு உறவாக இருந்த காலத்திலும் சரி பிரிந்த காலத்தில் சரி தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டத்தான் எடுத்துள்ளனர். தற்பொழுது அவர் கூறும் கருத்து நம்பத் தகுந்தது அல்ல.
தமிழகத்தில் அரசு பணிகளில் பல லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் கொடி கம்பங்கள் அகற்றுவதை நிறுத்த வேண்டும்.
கொடிக்கம்பங்களை அகற்றுவதை நிறுத்த வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்டத்துக்கு விரோதமான கனிம வளங்கள் கொள்ளை, அதிக அளவில் வெட்டி எடுப்பது, மணல் கடத்தல் போன்ற கனிமவளக் கொள்ளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் சம்பந்தப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




