ராஜபாளையத்தில் இதய அறுவை சிகிச்சை இல்லாமல் 14 வயது மாணவிக்கு அதிநவீன இதய சிகிச்சை. 24 மணி நேரத்தில் முழுமையாக குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பிரதான சாலையில் சித்ரா பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இதயம் சம்பந்தப்பட்ட பதிவேறு நோய்களுக்கு எந்த விதமான அறுவை சிகிச்சை இல்லாமல் 24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவ குழுவுடன் இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவருக்கு இதயத் துடிப்பு 250 ஆக இருந்தது. பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெற்றோர் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தனர். சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே கிடைத்த சிகிச்சை இப்போது ராஜபாளையத்தில் சித்ரா மருத்துவமனையில் கிடைத்துள்ளது, அந்த மாணவி எந்தவிதமான அறுவை சிகிச்சையும் இல்லாமல், மருந்துகளும் இல்லாமல் முழுமையாக குணமடைந்து 24 மணி நேரத்தில் வீடு திரும்பினார்.
சிக்கலான இதய மின்சார கோளாறான ‘சுப்ரா வென்ட்ரிகுலார் டாக்கிகார்டியா’ எனும் நோயுடன் மாணவி மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
இந்நோயால் இதயத்தில் நெருக்கடி, திடீர் மூச்சுத்திணறல், மனஅழுத்தம் போன்றவை ஏற்படலாம். இதுபோன்ற சிகிச்சைகள் சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனால் நோயாளிகளும், உறவினர்களும் வேலை, நேரம் மற்றும் பணத்தை இழந்து, மன அழுத்தத்துடன் பெருநகரங்கள் சென்றாக வேண்டிய நிலை இருந்து வந்தது. இனி அது மாறியுள்ளது. தற்போது ராஜபாளையத்திலுள்ள சித்ரா மருத்துவமனையில் இந்த அதிநவீன சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 5 ஆம் தேதி, மாணவி சித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மாணவியின் இதய மின்சார அமைப்பை ‘எலக்ட்ரோபிசியாலஜி ஸ்டடி’ மூலம் நுட்பமாக ஆய்வு செய்து, நோய்க்கு காரணமான தவறான மின்சார பாதையை ‘ரேடியோஃப்ரீக்வென்சி அப்ளேஷன்’ மூலம் அகற்றப்பட்டு சிகிச்சை சமயம் முழுக்க மாணவி அனஸ்தீசியா எனும் மயக்க மருந்து இல்லாமல், தன்னுடைய விருப்ப பாடல்களை கேட்டு, பெரிய திரையில் தன்னுடைய இதய சிகிச்சையை நேரில் பார்த்தார். சிகிச்சையை தேசிய, உலக அளவில் புகழ்பெற்ற இதய நிபுணர் டாக்டர் ஏ.பி. கோபாலமுருகன் மற்றும் மருத்துவர் இதய நிபுணர் டாக்டர் ஞானகுரு மேலும் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுரேஷ்பாபு மற்றும் சித்ரா மருத்துவமனை மருத்துவக்குழு மருத்துவர்கள் நேரடியாக மேற்கொண்டனர். சிகிச்சை குறித்து மாணவி கூறும்போது, “இது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்”, என்று கூறினார்.
முழு சிகிச்சையும் 1.30 மணி நேரத்தில் முடிந்தது. ஐசியு இல்லாமல் நேரே வார்டுக்கு சென்று, அடுத்த நாள் மருந்துகளே இல்லாமல் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
இது ராஜபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை தேடி பெருநகரங்களுக்கு செல்லும் நிலையை முடிவுக்கு கொண்டு வருகிறது. குறைந்த செலவில், உயர் தர மருத்துவம் இப்போது நம் இராஜபாளையத்திலேயே கிடைக்கிறது. சித்ரா மருத்துவமனை ஒரு 52 ஆண்டுகள்(1973) பழமையான நம்பிக்கைக்குரிய மருத்துவ நிறுவனம்.
இதயநோயாளிகளுக்காக உயர்தர சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், நரம்பியல், நிப்ரோலஜி, உடனடி அவசர சிகிச்சைகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் கிடைக்கின்றன. இதற்கு முன்னோடி நிறுவனர் மறைந்த டாக்டர் கே. பீமராஜா-வின் புதல்வன் இந்தியா முழுவதும் மற்றும் உலகளவில் புகழ்பெற்ற இதய நிபுணர் டாக்டர் ஏ.பி. கோபாலமுருகன் கூறுகையில், தான் பிறந்த ஊரான ராஜபாளையத்தில் பெருநகர மருத்துவ தரத்தை கொண்டுவர வேண்டும் என்ற என் கனவு நிறைவேறியுள்ளதாக கூறினார்.