விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் மேலரத வீதியை சேர்ந்த மாரிமுத்து முத்து பாண்டியம்மாள் தம்பதியருக்கு எட்டு வயது மகள் சஞ்சனா ஸ்ரீ -க்கு இதயத்தில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். மேல்சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரி செல்வதற்கான முழு செலவையும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சிறுமி சஞ்சனா ஸ்ரீ உடல் நலம் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார். பெற்றோரிடம் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.