• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

+2 தேர்வில் 599 மதிப்பெண் பெற்று சாதனை..,

ByVasanth Siddharthan

May 8, 2025

பழனி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஓவிய அஞ்சலி, பிளஸ் டூ தேர்வு முடிவில் 600 க்கு 599 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ், கணக்குப்பதிவியல் ,வணிகவியல், பொருளியல் ,கணினி பயன்பாடு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். ஆங்கில பாடத்தில் 99 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி ஓவியா அஞ்சலியை பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

ஓவியா அஞ்சலி படித்து ரிசர்வ் வங்கியில் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். பள்ளியில் தனக்கு ஆசிரியர்கள் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து கற்றுக் கொடுத்ததன் காரணமாக 599 மதிப்பெண் பெற்றதாகவும் , பத்தாம் வகுப்பு 11 ஆம் வகுப்பு படிக்கும் போது முதல் மதிப்பெண் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.