• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

600க்கு 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவிக்கு, முதலமைச்சர் வாழ்த்து…

ByVasanth Siddharthan

May 8, 2025

பன்னிரண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த பழனியை சேர்ந்த மாணவிக்கு தொலைபேசி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

பழனி பாரத் வித்யாபவன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஓவியாஞ்சலி இன்று வெளியான பொதுத் தேர்வு முடிவில் 600 மதிப்பெண்ணுக்கு 599 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். நெய்க்காரப்பட்டியில் உள்ள இவரது வீட்டிற்கு நேரில் சென்ற பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் பொன்னாடை போர்த்தி புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலைபேசி மூலம் மாணவி ஓவியாஞ்சலிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அப்பொழுது மாணவியின் உயர் கல்வி குறித்து கேட்டறிந்த முதலமைச்சரிடம் ரிசர்வ் பேங்க் இந்தியாவின் கவர்னராக விருப்பமுள்ளதாக மாணவி தெரிவித்ததை கேட்ட முதலமைச்சர் வியப்படைந்து மாணவிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தனக்கு அலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தது தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக மாணவி தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவிக்கு அலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.