• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நாளை மறுநாள் உலக புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி..,

ByG. Anbalagan

May 8, 2025

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற உதகை ரோஜா பூங்காவில் நாளை மறுநாள் துவங்க உள்ள ரோஜாகாட்சியில் சிறப்பு மலர் அலங்கார விழா சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

குறிப்பாக, இந்த ஆண்டு பூங்காவில் ‘கடல்வாழ் உயிரிணங்களை’ மையமாகக் கொண்டு மலர்களால் அமைக்கப்பட்டுள்ள மலர்சிற்பங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.

முத்து சிப்பி,நத்தை ,டால்பின்,மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன், போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள், வண்ணமயமான ரோஜா மலர்கள் கொண்டு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுவருகின்றன.

பூங்காவுக்குள் நுழையும் நொடியில் சுற்றுலாப் பயணிகள் “கடல் உலகத்திலேயே வந்துவிட்டோமோ?” எனும் உணர்வில் ஆழ்த்தும் வண்ணம் மலர் அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.

பல வண்ணங்களில் 2 லட்சம் ரோஜாக்களை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யபடுகிறது.

இந்த ரோஜா மலர்காட்சி திருவிழாவுக்காக நாடெங்கும் இருந்து வந்துள்ள பயணிகள், தனித் தன்மையுடைய மலர் வடிவமைப்புகளை ரசித்து புகைப்படங்கள் எடுத்து மகிழும் வண்ணம் மலர் அலங்காரங்கள் அமைக்கபட்டு வருகின்றன.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் தோட்டகலைதுறையின் இந்தக் மகத்தான மலர் அலங்கார காட்சிகள், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டும் வகையில் உள்ளது.

இந்த மலர் காட்சிவிழா, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அழகிய அனுபவமாக அமையும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்வாழ் உயிர்களின் அரிய தன்மை போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு வாசகம் மலர் அலங்காரத்தில் இடம் பெற்று உள்ளது.

நாளை மறுநாள் சனிக்கிழமை காலையில் தொடங்கும் இந்த ரோஜா கண்காட்சி ,சனி,ஞாயிறு,திங்கள் என மூன்று நாட்கள் நடைபெறும் ஊட்டி ரோஜா பூங்கா, இப்போது மலர்ச்சி பெருக்கும் கடல் உலகத்தின் ஒரு சிறிய பிரதிபலிப்பாக மாறியுள்ளது.