• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பள்ளி வாகனத்தில் வந்த பள்ளி மாணவன் காயம்..,

சாத்தூர் அருகில் உள்ள அமீர்பாளையம் பகுதியில் கோவிப்பட்டியிலுள்ள தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றிச் சென்ற போது முன்னாள் சென்று கொண்டிருந்த மினி பேருந்து திடீரென நிறுத்தியதால் எதிர்பாராத விதமாக பள்ளி வாகனம் மினி பேருந்து உன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

தனியார் பள்ளி வாகனத்தை போத்திரெட்டிபட்டியை சேர்ந்த கார்த்திக் வயது 30 என்பவர் இயக்கி வந்தார். தனியார் மினி பேருந்துணை அமீர் பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கமாரி முத்து வயது 31 என்பவர் இயக்கியுள்ளதாக தெரிய வருகிறது.
இந்த விபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் காயமடைந்த மாணவனை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்த பின்னர் போக்குவரத்தினை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்பட்ட பள்ளி வாகனத்தில் இருந்து மற்றொரு தனியார் வாகன மூலம் மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.