• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டிப்பர் லாரி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு..,

ByS.Navinsanjai

May 6, 2025

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பெரியசாமி என்பவர் இன்று அன்னூரில் இருந்து காரணம்பேட்டைக்கு மண் லோடு ஏற்றுவதற்காக டிப்பர் லாரியை இயக்கி சென்றார்.

அப்போது காரணம்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது என்ஜினில் இருந்து புகை வர தொடங்கியுள்ளது. திடீரென தீ பற்றியதை அறிந்த ஓட்டுநர் லாரியை விட்டு இறங்கி ஓடினார். சிறிது நேரத்திலேயே பி டிப்பர் லாரி முழுவதுமாக பரவி எறிய தொடங்கியது. தகவல் அறிந்து பல்லடம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க தொடங்கினர்.

டிப்பர் லாரி முழுவதுமாக தீயில் எரிந்து எலும்புக்கூடு போல காட்சியளித்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து மங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முக்கிய சாலையான காரணம்பேட்டை சாலையில் திடீரென டிப்பர் லாரி தீ பற்றி தெரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மங்கலம் காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து வருகின்றனர்.