சென்னை தாம்பரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைக்க காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சட்டமன்ற கூட்ட தொடரில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா, தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் உள்ள சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவு உள்ள மைதானத்தில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மைதானம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கி உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர். பாலு, சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை துவங்கி வைத்தனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)