• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கரூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ByAnandakumar

May 5, 2025

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை கண்டித்து கரூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் 28 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து, கரூர் மாவட்ட பாஜக கட்சி சார்பில், தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் துரைசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாதத்தை தடுக்க வேண்டும். இந்திய ராணுவத்திற்கு துணை நிற்போம், ரபேல் விமானங்கள் பறக்கட்டும், இந்திய மக்களை பாதுகாப்போம் என்று கண்டன கோஷம் எழுப்பி பாஜகவினர் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.