கத்திரி வெயில் மே 4 ம் தேதி முதல் தொடங்கி மே 28ஆம் தேதி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்திரி வெயில் 103 டிகிரி எட்டியது. முதல் நாளிலேயே கத்தரி வெயில் வாட்டி எடுத்த கொடுமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. சாலை ஓரங்களில் நுங்கு, பதநீர், மற்றும் இளநீர், தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.