• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பூத் கிளைக் கழக நிர்வாகிகள் அமைக்கும் பணி..,

ByK Kaliraj

May 4, 2025

விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பூத் கிளைக் கழக நிர்வாகிகள் அமைக்கும் பணியில் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகத்தில் இருக்கும் 44 பூத்களை முழுமையாக சரிபார்த்து கையேடுகளை பூர்த்தி செய்து விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்களிடம் அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளரும்,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான யோக.வாசுதேவன் சமர்ப்பித்தார்.

கழக அம்மா பேரவை இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான ராஜவர்மன், அனைத்துலக MGR மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சுப்ரமணியன் , மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயபெருமாள், மாவட்ட கழக இணைச் செயலாளர் இராஜேஸ்வரி வாசுதேவன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தோப்பூர் முருகன்,பூத் மண்டல பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.