• Wed. Nov 4th, 2026

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் திடீரென ஆய்வு..,

BySeenu

Nov 4, 2026

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்து கொண்டிருந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கருமத்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உடன் தகவல்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல காவல்துறை ஐஜி ரம்யா பாரதி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனை அடுத்து கோவை விமான நிலையம் வந்த முதல்வர் விஜய் தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார்.