விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் எம்பி கே புதுப்பட்டி அருகே நேற்று இரவு டீ குடிப்பதற்காக நடந்து சென்றவர் மீது லோடுவேன் மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

தென்காசி மாவட்டம் தென்மலை வடக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் வயது 55 இவரது மனைவி கோமதி வயது 48 இவர்கள் இருவரும் கட்டிட கட்டுமான பணிக்காக சித்தாள் வேலைக்காக அருப்புக்கோட்டையில் தங்கி கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று இரவு வேலை முடித்து சொந்த ஊருக்கு திரும்புவதற்காக வந்து கொண்டிருந்த பொழுது இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில்
எம் பி கே புதுப்பட்டி அருகே இவர்கள் வந்த ட்ரக்ஸ் என்ற பயணிகள் வாகனம் டயர் வெடித்து பஞ்சர் ஆனதால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி உள்ளனர்.
வாகனம் பழுது பார்ப்பதற்குள் டீ குடித்து விடலாம் என ரோட்டை கடப்பதற்காக சென்ற பரமசிவம் மீது இராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்ற ஈச்சர் லோடு வேன் மோதி தூக்கி வீசப்பட்டதில் பரமசிவம் கை கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயங்குடன் சாலையில் கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் உதவி செய்துள்ளனர். உடனடியாக தகவல் கூறி 108 வாகனத்தில் வந்த மருத்துவ பணியாளர் பரிசோதனை செய்து பார்த்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பதை உறுதி செய்துள்ளனர்.
இதை அடுத்து விபத்தில் உயிரிழந்த பரமசிவத்தின் உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்த இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு விபத்து ஏற்படுத்திய ஈச்சர் லோடு வேன் ஓட்டுநர் சங்கர சுப்பிரமணியம் வயது 55 தென்காசி மாவட்டம் சேந்தமரம் பகுதி தெரியவந்தது.
ஈச்சர் லோடு வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் சங்கர சுப்பிரமணியத்தை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.