• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையத்தில் TVK தலைவர் விஜயை தொண்டர்கள் வரவேற்ற காட்சி…

ByKalamegam Viswanathan

May 1, 2025

மதுரையில் நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ரோடு ஷோ
தமிழக வெற்றிக் கழக தலைவர், நடிகருமான விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக மதுரை வருவதாக மதுரையிலிருந்து படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல இருப்பதாக தகவல் பரவியதை அடுத்து காலையிலிருந்து மதுரை விமான நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது. இதற்காக காலை 7 மணிக்கு ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கினர். எனினும் காவல்துறையினர் மாலை 4 மணிக்கு தான் அவர் வருகிறார் என சொல்லி, அங்கு இருந்த ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

எனினும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் மற்றும் கட்சித் தொண்டர்களும் விமான நிலைய நுழைவாயிலில் குவியத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து விமான நிலையத்திற்குள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என காவல்துறை தெரிவித்தனர். பயணிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறையில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் சரியாக 3 45 மணி அளவில் தனி விமான மூலமாக மதுரை வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பவுன்சர்கள் குடை சூழ தனி வாகனத்தில் ரோட் சோ போன்று ரசிகர்களுக்கும் மற்றும் கட்சி தொண்டர்களுக்கும் கை அசைத்து சென்றார்.

தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பாலை பீச்சி அடித்தும், மலர் மாலைகளை தூவியும் அவரை வரவேற்ற சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக விமான நிலைய நுழைவாயில் இருந்து வெளியே வருவதற்கே ஆனது. இதனால் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பயணிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது அளவு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தன. விஜய் வருகையால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே இவர் சென்னையில் இருந்து கிளம்பும் பொழுது நான் கட்சி நிகழ்ச்சிக்காக வரவில்லை. கொடைக்கானலில் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். இதனால் விமான நிலையத்தில் யாரும் வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். எனினும் தொண்டர்களும், ரசிகர்களும் கேட்காமல் சுமார் ஆயிரக்கணக்கானோர் காலையிலிருந்து அவரை வரவேற்பதற்காக குவிந்து இருந்தனர்.