மத்திய அமைச்சரவையில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 1931 ஆம் ஆண்டிற்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், பொது மக்களும் குரல் கொடுத்து வந்தனர். இச்சூழலில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது.
காரணம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை கணக்கிடுவதும், மக்களின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
குறிப்பாக மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை, வாய்ப்பு கிடைக்க வகுக்கும் திட்டங்களும், சட்டங்களும் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் முறையாக சென்றடையும்.
மத்திய அரசு தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதற்குமான மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக இன்றைக்கு வெளியிட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு மகிழ்ச்சிக்குரியது.
மக்கள் தொகை கணக்கெடுப்பும், சாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.