விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொது இடங்களை ஆக்கிரமித்திருந்த பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த 147 கொடிக்கம்பங்கள் முழுமையாக அகற்றப்பட்டது.
தமிழகத்தில் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி, சமுதாய அமைப்புகளின் நிரந்தர கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துருந்தது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிவகாசி மாநகராட்சியில் கடத்த ஒரு வாரமாக தொடர்ந்து சாலையோரம், தெருக்கள் மற்றும் உள்ளிட்ட பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த கொடிக்கம்பங்களை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையிலான ஊழியர்கள் அகற்றினர். அந்த வகையில் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமிருந்த 147 கொடிக்கம்பங்களும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








