• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருபுவனத்தில் கலைஞரின் கனவு இல்லம் விழா

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் திருபுவனத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணி அளவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ,ஐஏஎஸ் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக திருபுவனம் பேரூராட்சி தலைவர் அமுதவல்லி கோவிந்தன் வரவேற்புரை வழங்கினார்.

மேலும் விழாவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக கலைஞரின் கனவு இல்லம் வேலை உத்தரவு மற்றும் வீட்டு மனை பட்டாவினை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடந்தை சட்டமன்ற தொகுதி உறுப்பினர், குழந்தை மாநகர துணை மேயர், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இறுதியாக திருபுவனம் தீ கோ மெட்ரிக் பள்ளியின் தாளாளர் எஸ். கே பஞ்சநாதன் நன்றியுரை வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.