• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மே 22ஆம் தேதி ராமநாதபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை

Byவிஷா

Apr 30, 2025

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி தர்காவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹீம் ஷாஹித் ஒலியுல்லா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மே 21ஆம் தேதி 22ஆம் தேதி மதியம் வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜூன் 14ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் மே 22ஆம் தேதி ராமநாதபுரம் மாட்டத்தில் உள்ள அனைத்து சார்நிலை கருவூலகங்கள் குறைந்தபட்ச பணியாளர்களோடு இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.