உசிலம்பட்டியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் எதிர்ப்பு திறந்த வெளி கருத்தரங்கம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மதுரை கிளையின் சார்பில் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் எதிர்ப்பு திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது.,

இதில் மதுரை கிளை திட்டத் தலைவர் முருகன் தலைமையில் மாநிலத் தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.,
மேலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாகும், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகும் ,மானிய விலை மின்சாரம் நிறுத்தப்படும்,நேரத்திற்கு ஒரு மின் கட்டணம் என்ற நிலை உருவாகும், என பல்வேறு பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.,
இதில் விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.