• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே களைகட்டிய மீன்பிடி திருவிழா..

ByKalamegam Viswanathan

Apr 28, 2025

மதுரை அருகே மேலூர் உள்ளது அரியூர்பட்டி கிராமம். உள்ள சாத்த அய்யனார் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

மீன்பிடித்தல் திருவிழா நடத்தப்படும் என சமூக வலைத்தளங்கள மூலம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் திருச்சி சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பத்து மாவட்ட கிராமத்தினரும் திருவிழாவில் பங்கேற்க வந்திருந்தனர். முன்னதாக கிராம பெரியவர்கள் வெள்ளை விசீயதை தொடர்ந்து கண்மாய் கரையில் தயாராக இருந்த பொதுமக்கள் ஒரு சேர கண்மாயில் இறங்கினர்.

கச்சா, ஊத்தா போன்ற மீன்பிடி உபகரணங்களை கொண்டு கட்லா கெளுத்தி, ரோகு, விரால் போன்ற நாட்டுவகை மீன்களை போட்டிபோட்டு பிடித்து சென்றனர். இது போன்ற மீன்பிடித் திருவிழா நடத்துவதால் விவசாயம் செழித்து மழை பெய்யும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்யாமல் அவரவர் இல்லத்தில் சமைத்து உண்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.