இராஜபாளையம் பகுதியில் சைபர் கிரைம் குற்றத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஏமாறுவதால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைபர் கிரைம் போலீசார், பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் சைபர் கிரைம் குற்றத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஏமாறுவதால், விருதுநகர் மாவட்டம் சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசாருக்கு நாள்தோறும் அதிகளவில் ஏமாந்த நபர்கள் புகார் அளிக்க செல்வதால், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில், ஏ. டி. எஸ். பி. அசோகன் ஆலோசனைப்படி, சைபர் க்ரைம் குற்றப்பிரிவு ஆய்வாளர் மீனா தலைமையில் போலீசார் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு சென்று அங்கு நின்றிருந்த பெண்களிடம் சைபர் க்ரைம் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
போன் மூலமாக லோன் முகநூல் மூலமாக லோன் கொடுப்பதாக அறிவிப்பு வருவதை பார்த்து ஏமாறக்கூடாது. டிஜிட்டல் முறையை பயன்படுத்தி போதை பொருள் வைத்திருப்பதாக கூறி மிரட்டுவது இது போன்ற சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
குறிப்பாக மும்பையில் இருந்து காவல்துறையிலிருந்து பேசுவதாகவும் உங்கள் குற்றம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் இருந்தும் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் எடுத்துரைத்தனர்.