விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலாளி மருத்துவ செல்விற்கு உதவி செய்த முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கலை சேர்ந்தவர் பால்பாண்டி இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தார்.

மருத்துவ செலவிற்கு உதவி செய்ய வேண்டும் என அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் காயம் அடைந்த பால்பாண்டிக்கு காயம் பற்றிய விபரத்தையும் கேட்டறிந்து மருத்துவ செலவிற்கு ரூபாய் இருபத்தி ஐந்து ஆயிரம் நிதி வழங்கினார். மேற்கு மாவட்ட பூத்து கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் ,சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் பலராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)