• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

சிமெண்ட் விலை உயர்வால் வேலை நிறுத்த அறிவிப்பு..,

ByRadhakrishnan Thangaraj

Apr 25, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரம் கட்டிட கட்டுமான இராஜபாளையம் இன்ஜினியர் அசோசியேசன் சங்கம் இணைத்து கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு.

இராஜபாளையம் மற்றும் தளவாய்புரம் பகுதியில் உள்ள கட்டுமான சங்கம் இன்ஜினியர் அசோசியேஷன் சங்கங்களைச் சேர்ந்த 10,18 தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இராஜபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் 13 கல் குவாரிகள் செயல்பட்டு வந்ததாகவும் தற்போது 5 கல்குவாரிகள் தான் செயல்பட்டு வருவதாகவும், இந்த கல்குவாரிகளை நடத்தும் உரிமையாளர்கள் தங்கள் நினைத்த விலைக்கு கட்டுமான பொருட்கள் எம் சாண்டல் மணல் ஜல்லி ஆகியவற்றை விலை உயர்த்துவதால் கட்டிடம் கட்ட முடியாமல் நடுத்தர மக்களும் கட்டிடம் காண்ட்ராக்ட் எடுத்த ஒப்பந்ததாரர்களும் அவதிப்பட்டு வருவதால் இன்று முதல் 25.04.2025 வருகிறது திங்கள் கிழமை வரை வேலை நிறுத்த போராட்டத்தை கட்டிட கட்டுமான சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது கட்டிட தொழிலாளர்கள் லோடுமேன் லாரியில் செங்கல் ஏற்றக் கூடியவர்கள் லாரி ஓட்டுநர்கள் என பல்வேறு வித தொழில் ஈடுபடக் கூடியவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பரமசிவம்

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து எம் சாண்டல் மணல் ஜல்லி விலையை குறைக்க வேண்டும் குறிப்பாக கடந்த வாரத்தில் 3000 ஆயிடும் ரூபாய்க்கு விற்கப்பட்ட எம் சாண்டல் தற்போது 6000ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.