விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டை கூட்டம் ஆர் என் ரவியை கண்டித்தும் சட்ட விதிமீறலலுக்கு துணை போகும் துணை ஜனாதிபதி ஜகதீப்தன்கரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் விஜயன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் லிங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி .மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் மூர்த்தி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் பி முத்துமாரி உள்ளிட்ட ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.