விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு சிதம்பரேஸ்வரர் சிவகாமி அம்பாள் உடனுறை திருக்கோவிலில் அமைந்துள்ள திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜை முன்னிட்டு திருநாவுக்கரசர் நாயனார் சிலைக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் விபூதி உள்ளிட்ட 21 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

முன்னதாக பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. திருநாவுக்கரசர் நாயனார் குருபூஜையில் இராஜபாளையம் தெற்குவங்கநல்லூர் பகுதியியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.