• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொடைரோடு அருகே சிசுக்கொலை – தாய் கைது..,

ByKalamegam Viswanathan

Apr 24, 2025

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (32) – சிவசக்தி(23) தம்பதியினருக்கு சிவன்யா 5, மகள் உள்ளார். இந்நிலையில் சிவசக்திக்கு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஏப்ரல் 20ல் பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. குழந்தை உடலை வீட்டின் பின்புறம் புதைத்தனர்.

குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர் வினோத், போலீசில் அளித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் அமுதா குழந்தையின் தாய் சிவசக்தி மற்றும் தந்தை பாலமுருகனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தாசில்தார் விஜயலெட்சுமி முன்னிலையில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

விசாரணையில் ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் வளர்க்க முடியாது என்றும் கணவர் திட்டுவார் என்று மன உளைச்சலில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக தெரிய வந்தது. தொடர்ந்து, அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தலைமையிலான போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சிவசக்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.