அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஸ்டாலின் நூறாண்டு வாழட்டும் அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவோம். ஆளுகின்ற பொறுப்பை அதிமுகவுக்கு தாருங்கள். ஜாதி ரீதியாக ஏமாற்றுகின்ற கட்சி திமுக என முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு நகர கழகம் சார்பில்
மலையபட்டி ஆவாரம்பட்டி பெரிய கடை பஜார் .உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் ஏற்பாடு வடக்கு நகர செயலாளர் துறை முருகேசன் செய்திருந்தார் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் மாவட்ட கழகச் செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி பேசும்பொழுது..,
இராஜபாளையம் பகுதிகளில் நடைபெற்று முடியாமல் இருக்கக்கூடிய பாதாள சாக்கடை திட்டம் முக்கூடல் கூட்டுக் குடிநீர் திட்டம் அதேபோல் புறவழிச்சாலை திட்டம் ஆகியவற்றை நான் அமைச்சராக இருக்கும் பொழுது கொண்டுவந்த திட்டங்கள் இத்திட்டங்களை முடிக்காமல் இன்னும் மக்களை சிரமப்படுத்தி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை புதிய திட்டங்கள் எதையும் இராஜபாளையம் பகுதிக்கு கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் நூறாண்டு வாழட்டும் அவரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்புவோம் ஆளுகின்ற பொறுப்பை அதிமுகவை தாருங்கள் திருட்டு ஓட்டு போட்டு திமுக ஆட்சியை பிடித்தது ஜாதி ரீதியாக ஏமாற்றுகின்ற கட்சி திமுக மக்கள் நலனுக்காக பாடுபடக்கூடிய கட்சி அதிமுக இராஜபாளையம் பகுதியில் யார் வேட்பாளர்கள் என்றாலும் வென்றோம் என்ற சரித்திரத்தை உருவாக்க வேண்டும் என பூத்து கமிட்டி நிர்வாகிகள் உடன் கலந்துரையாடி சிறப்புரை ஆற்றினார்.