விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள குண்டாயிருப்பு காளீஸ்வரி பட்டாசு தொழிற்சாலையில் வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பட்டாசு தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பான் பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் காயம் பட்டவர்களை மீட்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சி செய்து காட்டினார்கள். பட்டாசு தயாரிப்பில் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் பட்டாசு தயாரிக்க கூடிய அருளை மட்டுமே பட்டாசு தயாரிக்க வேண்டும் வேதிப்பொருளை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு மீறி பயன்படுத்தக் கூடாது.
பட்டாசு கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பட்டாசுகளை இருப்பு வைக்க வேண்டும் கூடுதலாக வைத்திருக்கக் கூடாது.தீயணைப்பு வீரர்கள் பிரச்சாரம் செய்தனர்.

தொடர்ந்து கல்லமநாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளை சமையலறையில் நுழைவதை அனுமதிக்க கூடாது. குடிசை வீடுகள் வைக்கோல் பகுதி கண்மாய் கரைகளில் குப்பைகளை கொட்டுவதையும் குப்பைகள் இருந்தால் அதில் தீய வைப்பதையும் தவிர்க்க வேண்டும். சமையல் செய்யும்போது கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் மின் வயர்கள் பாதுகாப்பான முறையில். உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். தரமான சுவிட்ச் போர்டுகளை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஏழாயிரம் பண்ணை
தீயணைப்பு நிலையத்திலிருந்து நிலைய அலுவலர் கேசவன்ராஜ் தலைமையில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து தடுப்பு குறித்து போலிஒத்திகை பயிற்சி பற்றி மற்றும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
