வக்ஃபு திருத்தச்சட்டத்தை அவசர கதியில் நிறைவேற்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் கம்பத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி பங்கேற்றார்.

ஒன்றிய பாஜக அரசு சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. இஸ்லாமியர்களுக்கு எதிரான இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் வாழும் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
வக்ஃபு திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிய மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்திற்கு கம்பம் ஏரியாச் செயலாளர் கே.ஆர்.லெனின் தலைமை வகித்தார். காஜாமைதீன், எம்.இம்ரான்கான், ஐ.சித்திகா, கே.அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வீ.மோகன், எஸ்.பன்னீர்வேல், ரெங்கேஸ்வரன், வாவேர் பள்ளிவாசல் ஜமாத்தலைவர் ஜெய்னுலாபுதீன், இடைக்கமிட்டி உறுப்பினர்கள் பாலகுருநாதன், ஸ்ரீராமன், வெற்றிகனேஷ், கே.முருகன், எஸ்.மணிகண்டன், எஸ்.மலரவன், என்.விஜயகுமார்,
டி.ரவிக்குமார், நகர் போன்ற உறுப்பினர் சாதிக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.