• Thu. Feb 19th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,

ByM.I.MOHAMMED FAROOK

Apr 19, 2025

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் MS.MVNV. லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.*

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி மதி. ஷாலினி சிங் IPS அவர்களின் உத்தரவின் படி மக்கள் மன்றம் என்ற பொதுமக்களின் புகார்களை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். அதேபோல் இவ்வாரம் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் காரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் MS.MVNV. லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் . மரி கிறிஸ்டியன் பால், காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன், சிறப்பு பிரிவு மற்றும் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீன் குமார் டி ஆர் பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன், நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரன், உள்ளிட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இன்றைய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 20 புகார்கள் பெறப்பட்டன. தனிநபர் புகார்களான கணவன் மனைவி பிரச்சனை, பெண்கள் சார்ந்த பிரச்சனை, சுற்றுப்புற பிரச்சனைகள் ஆகியவற்றை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்தனர்

மேலும் ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குழுவில் பணம் மோசடி நடந்திருப்பதாக புகார்கள் அளித்தனர் அளிக்கப்பட்ட அனைத்து புகார்களும் விசாரித்து உரிய தீர்வு அளிக்கப்படும் என்று புகார் தாரர்களிடம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் MS.MVNV. லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தெரிவித்தார்.