கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 19 வயது சிறுவன் மற்றும் பள்ளி சிறுமி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய பெற்றோர்கள் இருந்த நிலையில் சம்பவத்தை சிறுமி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கல்லூரி சிறுவன் சிறுமியின் ஊருக்குச் சென்று சிறுமியை அழைத்துக் கொண்டு அய்யர்மலைப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிறுவன் அம்மாபேட்டையில் உள்ள தனது பெற்றோர்களுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பெற்றோர்களும் அய்யர் மலைக்கு வந்துள்ளனர்.
வந்த பெற்றோர்கள் ஒரு வாடகை ஆம்னி வேனில் மகனையும் திருமணம் செய்த சிறுமியையும் தோகைமலை காவல் நிலையத்திற்கு ஆஜராக அழைத்துச் சென்றுள்ளனர். குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்றபோது அக்காண்டி மேடு என்ற இடத்தில் சிறுமியின் உறவினர்கள் வந்து வேனை மறித்து
ஆம்னி அடித்து நொறுக்கி வேனில் இருந்த சிறுவனின் உறவினர்களை அடித்து உதைத்து சிறுமியை மீட்டு சென்றனர்.
சம்பவம் பிரதான சாலையில் சினிமா பாணியில் நடந்ததால்
சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வந்ததால் சம்பவம் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் காயம் அடைந்த கல்லூரி சிறுவன் மற்றும் அவரது தம்பியை தோகைமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் காரை அடித்து சேதப்படுத்தி,
சிறுவன் மற்றும் அவரது தம்பியை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் உறவினர்கள் கழுகூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்ரமணி வயது 48. பிச்சைமுத்து மகன் சஞ்சய் வயது 20. ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.