• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ரசிகனாக கைகுலுக்கிய சிறுவன்

ByK Kaliraj

Apr 18, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியத்தில் பூத் கமிட்டி கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது.

அம்மன் நகர் பகுதியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜியை அம்மன் நகர் அதிமுக கிளைக் கழக நிர்வாகியின் மூன்று வயது மகன் அரசியல்வாதி போன்று வேஷ்டி அணிந்து கைகுலுக்கி உங்களுடைய ரசிகன் என அறிமுகப்படுத்தி வரவேற்றான். முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மகிழ்ச்சி அடைந்து சிறுவனுக்கு கை கொடுத்து மகிழ்ச்சி தெரிவித்து அன்பளிப்பு வழங்கினார்.

அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.