• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நீதிமன்றம் அமைக்க அமைச்சர் தங்கம் தென்னரசிடம் வலியுறுத்தல்..,

ByK Kaliraj

Apr 17, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூரில் தாலுகா அலுவலக நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என சிவகாசி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகனிடம் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என மனு அளித்தனர். வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து சென்னையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்து கோரிக்கை சம்பந்தமாக சிவகாசி எம்எல்ஏ அரசன் அசோகன் தெரிவித்தார்.

மனுவினை படித்து பார்த்து அமைச்சர் தங்கம் தென்னரசு மாவட்ட நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட்டில் பரிந்துரை பெற்று முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும், அமைச்சர் ரகுபதி கவனத்திற்கும் கொண்டு சென்று மாவட்ட நீதிமன்றம் ஆணையூரில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.