• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இன்று ஏப்ரல் 15 : உலக கலை தினம்

Byவிஷா

Apr 15, 2025

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி உலக கலை தினம் நுண்கலைகளை கொண்டாடுகிறது மற்றும் உலகம் முழுவதும் படைப்பாற்றல் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது. மனிதர்கள் தங்கள் படைப்புத் திறன்களையும் கற்பனைத் திறனையும் பயன்படுத்தி காட்சி வடிவத்தில் ஏதாவது ஒன்றை உருவாக்கினால், அது கலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த நாள் கலை மற்றும் கலைஞர்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்துகிறது.

வரலாறு:

2012 ஆம் ஆண்டு, யுனெஸ்கோ பொது மாநாட்டின் 40வது கூட்டத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதியை உலகக் கலை நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞர் லியனார்டோ டா வின்சியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. லியனார்டோ டா வின்சி ஒரு சிறந்த ஓவியர் மட்டுமல்ல, ஒரு சிற்பி, கட்டிடக் கலைஞர், இசைக்கலைஞர், விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், உடற்கூறியல் நிபுணர், நிலவியலாளர், கார்ட்டோகிராஃபர், தாவரவியலாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர். அவர் கலைக்கும் அறிவியலுக்கும் இடையே ஒரு பாலமாக திகழ்ந்தார்.

நோக்கம்:

கலையின் வளர்ச்சி, பரவல் மற்றும் அனுபவித்தலை ஊக்குவித்தல்.

கலைப் படைப்புகளுக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துதல்.

கலை வெளிப்பாடுகளின் பன்முகத்தன்மை குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல்.

நிலையான வளர்ச்சிக்கு கலைஞர்கள் ஆற்றிவரும் பங்களிப்பை ஹைலைட் செய்தல்.

பள்ளிகளில் கலை கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல்.

கலைஞர்கள் மற்றும் கலை சுதந்திரம் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் சூழலை ஆதரித்தல்.

அறிவைப் பகிர்வதற்கும், ஆர்வத்தைத் தூண்டுவதற்கும், கலை குறித்த உரையாடல்களை உருவாக்குவதற்கும் ஒரு தளத்தை அமைத்தல்.

கொண்டாட்டங்கள்:

உலகெங்கிலும் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இந்த நாளில் ஓவியக் கண்காட்சிகள், சிற்பக் கூடங்கள், கலைப் பட்டறைகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விவாதங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன. சமூக ஊடகங்களிலும் சூறுழசடனயுசவனுயல என்ற ஹேஷ்டேக் மூலம் பலரும் தங்கள் கலைப் படைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

முக்கியத்துவம்:

உலகக் கலை நாள் கலை என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் கலாச்சார அடையாளத்தையும், விழுமியங்களையும், வரலாற்றையும் பிரதிபலிக்கிறது என்பதை நினைவூட்டுகிறது. கலை மூலம் மக்கள் ஒருவரோடு ஒருவர் இணைகிறார்கள், புதிய சிந்தனைகள் உருவாகின்றன, மேலும் ஒரு அமைதியான மற்றும் வளமான உலகை உருவாக்க முடியும். இந்த நாள் கலைஞர்களின் கடின உழைப்பையும், அவர்களின் படைப்பாற்றலையும் அங்கீகரித்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.