• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ரஜினியின் முழு உருவ கற்சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

ByKalamegam Viswanathan

Apr 13, 2025

தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டியும், சன் பிக்சர்ஸ் – ன் கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும், திருமங்கலம் ரஜினி ரசிகர் ரஜினியின் முழு உருவ கற்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பொங்கலிட்டு தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தனர்.

   மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் தொழில் மையம் நடத்தி வரும் கார்த்திக் (51) என்பவர் தனது குடும்பத்துடன் பல ஆண்டுகளாக ரஜினியின் திரைப்படங்கள் அனைத்தையும், தனது வீட்டின் ஒரு அறை முழுவதும் சேகரித்து வைத்து, ரஜினியை குல தெய்வமாக வழிபடும் கார்த்திக் குடும்பத்தினர்,   கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு 300 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன ரஜினியின் முழு உருவத்தில் மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளாக,  தனது வீட்டின் அறையில் வைத்து, அதற்கு ரஜினி கோவில் என பெயரிட்டு, கோவிலில் சாமிக்கு எவ்வாறு திருவாச்சி அமைக்கப்பட்டுள்ளதோ, அதேபோன்று ரஜினியின் உருவ சிலைக்கும் திருவாச்சிகள் அமைக்கப்பட்டு, நாள்தோறும் பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட ஆறுவகையான அபிஷேகங்கள் செய்து வரும் கார்த்திக் குடும்பத்தினர், நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி,  ரஜினியின் முழு உருவ சிலைக்கு அவரை குலதெய்வமாக வழிபடுவதால், சிலை முன்பு கார்த்திக் குடும்பத்தினர்  ரஜினியின் சிலைக்கு ஆறு வகையான  அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தியதுடன்,  சன் பிக்சர்ஸ் - ன் கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும் வழிபாடு செய்தனர்.