• Tue. May 26th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Apr 13, 2025

எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், மானியம் வழங்காத மாநில அரசை கண்டித்தும் – கோவையில் எரிவாயு சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் த.வெ.க கட்சியினர் .

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு அமலுக்கு வந்து உள்ளது சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்கின்றன.

கடந்த 2024 மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டது. இதனால், சிலிண்டர் விலை ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக குறைந்தது. கடந்த ஓராண்டில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையிலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ.550 ஆக அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு எரிவாய்வு சிலிண்டரின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், மானியம் வழங்குவதாக கூறி வழங்காத மாநில அரசை கண்டித்தும் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான த.வெ.க – வினர் ஈடுபட்டு வருகின்றனர்.