• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மானாமதுரையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியை காப்பாற்றிய தீயணைப்புத்துறையினர்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சோனைமுத்து 75, இவர் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில் எதிரே வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்கி கரையை கடக்க முயன்றார். ஆனால் ஆற்றில் நீர் அதிகமாக சென்றதால் மூதாட்டியை வெள்ள நீர் அடித்து சென்றது. இதையடுத்து மூதாட்டி ஆற்றில் உள்ள செடிகளை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மூதாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினரை மானாமதுரை பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.