சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாத்தில் பதில் அளித்து பேசிய, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவு மானியமாக 14 ஆயிரம் கோடி அளித்த முதல்வர் மற்றும் நிதி அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொளவதாகவும், கடந்த 10 ஆண்டு கால ஆட்சி காலத்தில் நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2500 வழங்கப்படும் என்றார்.
மூன்று ஆண்டுகளாக செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் பணியை தொடங்கி வருவதாகவும், அதிக அளவு நெல் கொள்முதல் செய்து உள்ளதாகவும், நேரடி கொள் முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும், 145 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, ஒரு நெல் மணி கூட வீணாக் கூடாது என்று முதல்வர் கூறியுள்ளார்.
இந்த ஆட்சியில் 1,015 கோடி மதிப்பீட்டில் 8.34 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 87 நவீன நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளது. நெல் அரவை ஆலைகள் மூலம் மக்கள் மகிளும் வண்ணம் தரமான அரிசியை வழங்கி வருகிறோம்.
இந்த ஆட்சியில் இதுவரை 19 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் சரிபார்ப்பு பணிகள் முடிந்த தகுதியானவர்கள் குடும்ப அட்டைகள் வழங்கப்படும். இந்த ஆட்சியில் 2,573 ரேசன் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய பகுதி நேர கடைகள் திறக்கப்படுகிறது.
அமுதம் அங்காடியில் பொருட்கள் வாங்கினால் மாதம் 1000 முதல் 1500 வரை சேமிக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் மூலம் சுமார் 14 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்.
மாதம் ஒரு முறை குறைதீர்வு முகாம் நடத்தப்படுகிறது எனவும் அமைச்சர் பதிலுரையில் தெரிவித்தார்.